வியாகாம் 18 தரப்பில் புதிய ஸ்போர்ட்ஸ் சேனல் அதுவும் தமிழில்!

ஸ்போர்ட்ஸ் 18 தமிழ்


வியாகாம் 18 நெட்வொர்க் ஸ்போர்ட்ஸ் 18 என்ற பெயரில் பல விளையாட்டு சேனல்களை ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஏற்கனவே ஸ்போர்ட்ஸ் 18 1 எஸ்டி & எச்டி சேனல்களை தொடங்கியது மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து ஸ்போட்ஸ் 18 கேல் என்ற சேனலையும் ஆரம்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பல சேனல்களுக்காண வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது. பல்வேறு மொழிகளில் புதிய சேனல்கள் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம் என ஏற்கனவே வியாகாம் 18 தரப்பில் பல தகவல்கள் கண்ட நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களை கொண்டு வர இருக்கிறது. அவையாவன என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.



ஸ்போர்ட்ஸ் 18 தமிழ், ஸ்போர்ட்ஸ் 18 தெலுங்கு, ஸ்போர்ட்ஸ் 18 இந்தி மற்றும் ஸ்போட்ஸ் 18 2 ஆகிய சேனல்கள் எஸ்டி மற்றும் எச்டி தரத்தில் வரவிருக்கிறது. அதற்கான வர்த்தக முத்திரை பதிவு விவரங்களை கீழே உள்ள புகைப்படங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Sports 18 Tamil SD & HD

Sports 18 Hindi, Telugu SD & HD

Sports 18 2 SD & HD

இவ்வாறு பல சேனல்கள் இனிவரும் காலங்களில் வியாகாம் 18 தரப்பில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான மீடியா ரைட்ஸ் 2023-2027 ஏலத்தில் வியாகாம 18 டிஜிட்டல் தளங்களில் ஐபிஎல் ஒளிபரப்பு அதற்கான உரிமத்தை பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

எனவே, ஐபிஎல் ஐ மேற்கண்ட சேனல்களில் ஒளிபரப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த சேனல்கள் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த சேனல்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் ல் ஐபிஎல் டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பானால் நீங்கள் பார்த்தீர்களா? இந்த சேனல் வருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மற்ற ஸ்போர்ட்ஸ் சேனல்களை காட்டிலும் இது சிறந்து விளங்குமா? கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! உங்கள் அனைத்து கருத்துக்களும் இங்கே வரவேற்கப்படுகின்றன! நன்றி!

Post a Comment

1 Comments

  1. Sports18 TCCLil innamum English Mozhiyin thaan telecast seyyapadugiradhu, Tamil Language Feed epodhu kidaikkum endru thelivu padutha mudiyuma?

    ReplyDelete