பிரபல யூடியூப் சேனல் தற்போது தொலைக்காட்சி சேனலாக! சித்திரம் டிவி இடத்தில்..!

பிளாக் ஷீப் டிவி

தமிழில் இதுவரை யூடியூப் சேனலாக சேனலாக மட்டுமே இருந்து வந்த பிளாக் ஷீப் சேனலின் அடுத்த அடியாக தற்போது பிளாக் ஷீப் தொடங்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சாதாரண ஒரு யூடியூப் சேனலாக மட்டுமல்லாமல் அதை தாண்டி பல்வேறு விஷயங்கள் (பிளாக் ஷீப் அவார்ட்ஸ், ப்ரோட்காஸ்டிங், மீடியா ப்ரொடக்ஸன் மற்றும் பல) செய்து வருகின்றனர். 


இன்று (12-12-2022) பிளாக் ஷீப் தரப்பிலிருந்து பிளாக் ஷீப் டிவி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏற்கனவே கலைஞர் குரூப்பிலிருந்த ஒரு சேனலான சித்திரம் என்ற தொலைக்காட்சியை மாற்றம் செய்கிறது.

என்னதான் சேனலின் பெயர் பிளாக் ஷீப் டிவி என்று இருந்தாலும் கலைஞர் குரூப் தரப்பில் டிரேட் மார்க் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு கலைஞர் குரூப் சேனல் ஆன சித்திரம் (குழந்தைகளை மையப்படுத்திய சேனல் ஆனால் பொழுதுபோக்கு சேனலாக இருந்து வந்தது) சேனலையே புதுப்பொலிவாக்கி பிளாக்ஷிப் டிவி என பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதுபோக இது ஒரு முழு நேர பொழுதுபோக்கு சேனலாகவும், இலவச (எப்டிஏ) சேனலாகவும் வந்துள்ளது. மேலும் பிஎஸ் வேல்யூ செயலியின் மூலமாகவும் இந்த சேனலை முழுவதும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சேனல் தொடங்கப்படவிருந்த நேரத்தில் இதன் பிராண்ட் அம்பாஸ்டராக வைகை புயல் வடிவேலு இணைந்திருந்தார். அதன் பிறகு பலரது கவனத்தையும் இந்த சேனல் மேலும் ஈர்த்தது என்று கூறலாம். 


தற்போது இதில் முக்கியமாக அனைவராலும் பார்க்கப்படுவது இதன் அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிதான். இது ஒரு பொழுதுபோக்கு சேனலாக இருப்பதால் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இனிவரும் காலங்களில் இது பற்றிய மேலும் பல விவரங்கள் பார்க்கலாம்! தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் டிவி இன்ஃபோ உடன்..!

Post a Comment

0 Comments