ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் சேனல் ஆக உள்ள ஸ்டார் குழுமத்தின் ஒரு பகுதியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஆனது தற்போது அடுத்த கட்ட நகர்வாக தமிழிலும் இரண்டாவது ஸ்போர்ட்ஸ் சேனலாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தமிழ் எச்டி போன்ற சேனல்கள் கொண்டு வரவிருக்கிறது.
ஏற்கனவே ஸ்டார் ஸ்டார் நெட்ஒர்க் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலின் ஒரு பகுதியான ஜியோ இணைந்து ஜியோ ஸ்டார் என்று பெயரிட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய 2025 க்கான ட்ராயின் புதிய விதிமுறைப்படி சேனல்களின் விலை பட்டியலை வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தமிழ் எச்டி சேனலைப் பற்றி பார்க்கும் முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் பற்றி சற்று அறிவோம். 2017 சாம்பியன்ஸ டிராபியின் தொடக்கத்தின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் ஆனது தொடங்கப்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் மே 28 வருடம் 2017 ஆகும்.
இந்த சேனல் ஆனது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. ஏனெனில் அதற்கு முன்னால் தமிழ் வர்ணனை வேண்டுமென்றால் விஜய் டிவி, கே டிவி, கலர்ஸ் தமிழ் அல்லது விஜய் சூப்பர் போன்ற சேனல்களில் மட்டுமே முக்கியமான நிகழ்வுகளில் தமிழ் வர்ணனை கேட்க முடியும். ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் வந்த நாளிலிருந்து இந்த நிலை மாறியது.
பிற்காலத்தில் இந்த சேனலின் எச்டி வடிவமும் வெளியிடப்பட்டது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு ஜியோ உடன் இணைந்த இணைப்பு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. அதன்படியே தற்போது ஸ்டார் ஸ்போர்ட் 2 தமிழ் & அதனுடைய எச்டி சேனலானது தற்போது வரவிருக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் புதிய சேனல்கள்
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஹிந்தி
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஹிந்தி எச்டி
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தெலுங்கு
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தெலுங்கு எச்டி
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 கன்னடா
0 Comments