சன் டைரக்ட்க்கு என்றே பிரத்யேகமாக ஒரு புதிய ஓடிடி சேவை “சன் டைரக்ட் கோ”

சன் டைரக்ட் கோ


சன் டைரக்ட் தரப்பில் கடந்த ஆண்டுக்கு முன்னர் இருந்தே பலவிமான தகவல்கள் வெளியாகி வரும் “சன் டைரக்ட் கோ" ஓடிடி புதிய சேவை பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

கடந்த ஆண்டுக்கு முன்னரே 20 டிசம்பர் 2022 அன்று சன் டைரக்ட் கோ ஆனது ப்ளே ஸ்டோரில் லானச் செய்யப்பட்டது. எனினும், அனைவருக்கும் கிடைக்கப் பெறாத வண்ணமே தற்போது வரை சோதனையில் இருந்துள்ளது. 


இந்த ஓடிடி ஆனது சன் டைரக்ட் வாடிக்கையாளர்கள் அவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கண்டுகளித்து வரும் டிவி சேனல்கள் (நேரலை) ஐ மொபைலிலும் காண வழிவகை செய்யும் வகையில் உள்ளது. 

அதுகுறித்த தெளிவான புகைப்படங்களை நீங்கள் கீழே பார்க்கலாம்:

Sun Direct Go (Mobile View)

இதில் லைவ் டிவி சேனல்கள் மட்டுமின்றி திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளையும் நீங்கள் கண்டுகளிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Sun Direct Go (TV View)

இந்த புதிய ஓடிடி சேவையின் லான்ச் தேதியானது தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், சன் தொலைக்காட்சியின் ஆண்டுவிழா வானது வரும் 14 ஏப்ரல் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அப்போது லான்ச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் பல தகவல்களை வரும் நாட்களில் விரிவாக பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் டிவி இன்ஃபோ உடன்!

Post a Comment

0 Comments