ZEE நெட்வொர்க்
தமிழில் மிக முக்கியமான சேனல்களான ZEE NETWORK சேனல்கள் வருகிற பிப்ரவரி 1ம் தேதி தங்களது புதிய விலைப்பட்டியல் (RIO) ஐ கொண்டு வர இருக்கிறது. மற்ற நெட்வொர்க் ஐ காட்டிலும் இதனை தாமதமாக பதிவிட காரணம் இதில் ஒரு தமிழ் சேனலின் விலை கூட மாற்றம் இல்லாமல் இருப்பதே ஆகும்.
விலை மாற்றம் இல்லாத தமிழ் சேல்கள்
தமிழில் உள்ள ZEE தமிழ் மற்றும் ZEE திரை (மேலும் இதனுடைய எச்டி வெர்ஷன்களும்) இரண்டு சேனல்களுமே விலைமாற்றம் ஏதுமின்றி காணப்படுகிறது. அதன் விலை விவரம் பின்வருமாறு :
- ZEE தமிழ் : ரூ 19
- ZEE தமிழ் எச்டி : ரூ 19
- ZEE திரை : ரூ 10
- ZEE திரை எச்டி : ரூ 16
விலை மாற்றம் ஏற்பட்டுள்ள ZEE NETWORK ன் மற்ற சேனல்களின் விவரம் :
சேனல்கள் பழைய₹ புதிய₹
&டிவி | 6 | 10 |
& பிக்சர்ஸ் | 10 | 15 |
ZEE கஃபே | 10 | 3 |
& பிலிக்ஸ் | 15 | 5 |
ZEE கஃபே எச்டி | 10 | 5 |
& பிலிக்ஸ் எச்டி | 19 | 10 |
& பிரைவ் எச்டி | 6 | 3 |
விலை மாற்றம் செய்யப்பட்டுள்ள சேனல்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லாத பிறமொழி சேனல்கள் என்பது மேலேயுள்ள பட்டியலின் மூலம் நன்கு அறியலாம். எனினும் & பிலிக்ஸ் போன்ற சேன்ல்கள் தமிழ் ஆடியோ Feed உடன் வருவதால் அதில் ஒளிபரப்பாகும் ஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் பார்த்துக் கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், மற்ற நெட்வொர்க்குகளை காட்டிலும் ZEE நெட்வொர்க்-ல் உள்ள நிறைய சேனல்களின் விலை சற்று குறைந்துள்ளது.
இந்த புதிய விலைப்பட்டியல் குறித்த உங்களது கருத்துக்கள் எதுவாயினும் இங்கு வரவேற்கப்படுகிறது. எனவே, கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்களுடைய கருத்துக்களை பகிரவும். நன்றி!
0 Comments