திரும்பி வந்தாச்சு! ஸ்டார் நெட்வொர்க் ன் சேனல்கள் மீண்டும் தமிழ்நாடு கேபிள் டிவிக்களில்..!

ஸ்டார் VS கேபிள் நெட்வொர்க்


ஒரு சில நாட்களாக தமிழ் ஸ்டார் (விஜய் டிவி, விஜய் சூப்பர், விஜய் டக்கர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (ம) பல) சேனல்கள் தமிழ்நாட்டில் உள்ள பல கேபிள் டிவிகளில் ஒளிபரப்பு ஆகாமலும் சேனல்கள் நீக்கி இருந்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது. தற்போது ஸ்டார் நெட்வொர்க்கிங் சேனல்கள் அனைத்தும் பழைய நிலைமையில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.



எதனால் ஒளிபரப்பு நிறுத்தம்?


சேனல்கள் (ம) பிரோட்காஸ்டர் பேக்குகளின் விலை உயர்வால் (என்டிஓ 3.0) அதனை குறைந்த விலையில் (டிசிசிஎல உட்பட) பல கேபிள் டிவி ஆபரேட்டர்களால் தர இயலவில்லை. அதனால், பல கேபிள் டிவிகளில் ஒளிபரப்பு நிறுத்தம் மற்றும் ஸ்டார் சேனல்கள் நீக்கம் உள்ளிட்டவை நடைபெற்றது. 



இதனைத் தொடர்ந்து விஜய் டெலிவிஷன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தவை :- ஸ்டார் விஜய், விஜய் டக்கர், விஜய் சூப்பர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் பிற ஸ்டார் சேனல்களை உங்கள் தற்போதைய பேக்குகளில் தரவில்லை எனில், அவர்களிடம் விலை குறைப்பு பற்றி கேளுங்கள் அல்லது வேறு ஆபரேட்டர்களுக்கு தற்போதே நகருங்கள்.




இவ்வாறு ஸ்டார் டெலிவிஷன் கூறியிருந்தது அனைத்து கேபிள் ஆபரேட்டர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அனைவரும் தங்களுக்கு தேவையான ஸ்டார் சேனல்களை தாங்களே தேர்வு செய்து அதற்கான பணத்தை ஆபரேட்டர்களிடம் செலுத்தி அதை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என்ற சூழ்நிலை உருவானது. 


தற்போது மீண்டும் ஸ்டார் தமிழ் சேனல்கள் அனைத்தும் பழையபடி (டிசிசிஎல், விகே டிஜிட்டல், எஸ்சிவி) பல கேபிள்களில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. எனினும், அதற்கு ஏற்றார்போல் விலை ஒவ்வொரு கேபிள் டிவிகளிலும் சற்றே உயரும் என்று கூறப்படுகிறது. அதுவும் தனித்தனி சேனல்கள் என்று பணம் செலுத்தாமல் மொத்தமாக கேபிள் டிவி ஆபரேட்டர்களால் பேக்கேஜ் ல் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுவதால் விலை ஒரு 20-50 க்குள் மட்டுமே அனைத்து கேபிள்களில் ஸ்டார் சேனல்கள் இருக்கும் என்பது சற்றே சிறிது ஆறுதலாக உள்ளது. எப்படியோ மீண்டும் தமிழ் ஸ்டார் சேனல்கள் ஒளிபரப்பையாகியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


ஆனால், இன்னும் இதுபோன்று மற்ற நிறுவனங்களின் சேனல்களும் டிராய் என்டிஓ 3.0 படி வலுவான நிலையை எடுத்தால் எவ்வாறாக நிலை மாறும் என்பதே அனைவரின் கருத்தாகவும் கவலையாகவும் உள்ளது.


Post a Comment

0 Comments