மலையாள முதன்மை செய்தி சேனலான ஜனம் டிவி தற்போது தமிழிலும்!

ஜனம் டிவி


"ஜனம் டிவி" மலையாள மொழியில் மிகப் பிரபலமான செய்தி சேனல்களுள் ஒன்றாகும். JANAM TV TAMIL (ஜனம் டிவி தமிழ்)


ஜனம் மல்டிமீடியா லிமிடெட் தரப்பில் தற்போது புதிதாக வரவிருக்கும் சேனல் அதுவும் முக்கியமாக தமிழில் வரவிருக்கும் சேனல் "ஜனம் டிவி தமிழ்" ஆகும். 


தற்போது கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி ஜனம் டிவி தமிழ் சேனல் ஆனது வரும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து கேபிள் டிடிஎச் நெட்வொர்க் களிலும் கொண்டுவரப்பட இருக்கிறது.

இந்த சேனலும் ஜனம் டிவி போன்று செய்தி சேனலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சேனல் எதைப்பற்றியதாக இருக்கும் மேலும் இது எவ்வளவு தொகையை கொண்டிருக்கும் அல்லது இலவச சேனலாக இருக்குமா என்று தற்போது வரை எந்த அறிவிப்புகளும் இல்லை. 


அப்படி ஒருவேளை செய்தி சேனல் ஆக வந்தால் அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு பார்வையாளராக அதன் மேல் அவ்வளவு ஈடுபாடு இருக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறி ஆக வேண்டும். 

ஏனெனில் ஏற்கனவே தமிழில் நிறைய செய்தி சேனல்கள் உள்ளன. சமீபத்தில் கூட நியூஸ் தமிழ் 24×7 உட்பட பல்வேறு நாம் அறிந்த பிற பிரபலமான சேனல்களும் உள்ளன. தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு, நியூஸ் 7 தமிழ், மாலை முரசு மற்றும் பல.

பார்வையாளர்களிடம் இருக்கும் விருப்பமானது இன்னும் மேலும் வேறு பல வகைகளில் சேனல்களை கொண்டு வரலாம் என்பதுதான். 

பொறுத்திருந்து பார்க்கலாம் தொடர்ந்து இணைந்திருங்கள் மேலும் பல இன்ஃபோ_களுக்கு இணைந்து இருங்கள் தமிழ் டிவி இன்ஃபோ உடன்!

Post a Comment

0 Comments