புதுப்பிப்பு! விஜய் டக்கர் என பெயர் மாற்றம் செய்யப்படும் விஜய் மியூசிக் சேனல்!

விஜய் டக்கர் - VIJAY TAKKARதமிழில் தமிழ் மக்களுக்காக சமீபத்தில் ஸ்டார் நெட்வொர்க் (டிஸ்னி ஸ்டார்) நிறுவனத்தின் ஒரு பாகமான விஜய் சேனல் விஜய் டக்கர் ஆகும். இந்த சேனல் கடந்த 10 அக்டோபர் மாதம் 2022 தேதி அன்று அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் களிலும் நிறுவப்பட்டது. இதில் அனைவரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த சேனல் தனி மற்றும் புதிய சேனலாக லான்ச் செய்யப்படவில்லை, தமிழில் சிறிது காலமாக குழப்பத்தில் ஓடிக்கொண்டிருந்த விஜய் மியூசிக் சேனலை விஜய் டக்கர் என மறுபெயரிட்டு மறுநிறுவல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சேனல் தற்போது தமிழில் ஒரு வித்தியாசமான இளைஞர்கள் சார்ந்த பொழுதுபோக்கு சேனலாக இடம்பெற்றுள்ளது. 

விஜய் டக்கர் புதிய நிகழ்ச்சிகள்


விஜய் டக்கர் சேனலின் ப்ரோமோ வில் ஏற்கனவே பல புதிய நிகழ்ச்சிகள் என்னென்ன வருகிறது என்பது பற்றி தெரிந்திருக்கலாம். எனினும் கொஞ்சம் விளக்கமாக தற்போது பார்க்கலாம். இதில் ஒரு ஆறு நிகழ்ச்சிகள் உள்ளடங்கும். அவை அனைத்தும் இளைஞர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளாக இருப்பது நாம் அந்த நிகழ்ச்சிகளின் பெயர்களை வைத்தே கண்டறியலாம். அவையாவன,

* காலேஜ் டா
* சினிமா காரம் காபி
* ட்ரக் மேல லக்கு
* ஸ்டைல் ஸ்டைல் தான்
* ஸ்டாருடன் ஒரு நாள்
* சம்திங் சம்திங்

விஜய் டக்கர் மேற்கோள்


தமிழில் நாம் கண்டுகளிக்கும் பல்வேறு சேனல்களுக்கும் ஒரு மேற்கோள் உண்டு. அவையனைத்தும் தமிழ் மக்கள் மனதில் எளிதில் புரியும்/ பதியும் வகையில் அமைவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவற்றுள் உதாரணமாக ஜீ தமிழ் சேனலை எடுத்துக்கொண்டால் "மாற்றம் ஒன்றே மாறாதது”, விஜய் டிவி சேனல் என்றால் "எதிலும் புதுமை தமிழின் பெருமை” அதேபோல் இந்த விஜய் டக்கர் சேனலுக்கான மேற்கோள் என்னவென்றால் "இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்” என்பதாகும். அதுமட்டுமல்லாமல் இதன் பாடல் ஒலியும் அதற்கு தகுந்தாற்போல் "விஜய் டக்கரு இனி இதுதான் ட்ரெண்டு செட்டரு" அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சேனல் விலை மற்றும் எல்சிஎன் முழுவிவரம்


விஜய் டக்கர் சேனலானது மறுபெயரிட்டு ரீலான்ச் செய்யப்பட்ட ஒரு சேனல் ஆகும். இதன் விலை நிலவரம் ₹1+ஜிஎஸ்டி மற்றும் இதன் எல்சிஎன் விவரம் முன்பு இருந்த அதே விஜய் மியூசிக் சேனல் நம்பர் (எல்சிஎன்) என்பதும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். 

அதுபோக இந்த சேனல் எவ்வாறு செயல்படுகிறது மேலும் அப்டேட் கள் வருமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டி உள்ளது.

Post a Comment

0 Comments