வரும் 1 Sep 2022 இல் இருந்து கலைஞர் குரூப் சேனல்கள் இலவசம் இல்லை! அதிரடி அறிவிப்பு!

கலைஞர் குரூப்


தமிழில் அனைவரும் அறிந்த பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும் சேனல்களையும் கொண்டுள்ள ஒரு நிறுவனம் கலைஞர் குரூப் ஆகும். கலைஞர் குரூப் ஆனது கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள், கலைஞர் முரசொலி, கலைஞர் சிரிப்பொலி, கலைஞர் இசையருவி, கலைஞர் சித்திரம் ஆகிய சேனல்களை உள்ளடக்கி உள்ளது.

தற்போது கலைஞர் குரூப்பில் வந்துள்ள ஒரு பெரிய தகவல் என்னவென்றால் இதுவரை எப்டிஎ சேனலாக இருந்த கலைஞர் குரூப் சேனல்கள் தற்போது கட்டண சேனல்களாக மாற்றப்பட போகிறது என அறிவிப்புகள் போய் வருவதை சில நாட்களாக நாம் பார்த்திருப்போம். தற்போது அதைப் பற்றிய முழு விவரங்களையும் பார்ப்போம்.

செப்டம்பர் 1 முதல்இதன்படி வரும் 1 செப்டம்பர் 2022 இலிருந்து கட்டண சேனல்களாக கலைஞர் குரூப் சேனல்கள் மாற இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இது பேக்கேஜ் முறையில் குறிப்பிட்ட விலையுடன் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. தனி தனி சேனல்கள் மற்றும் பேக்கேஜின் விளைவுகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

விலை நிலவரம்முதலில் கலைஞர் டிவி சேனலை எடுத்துக் கொண்டோம் என்றால் அதன் விலை 12 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சிரிப்பொலி 8 ரூபாய்க்கு கலைஞர் செய்திகள் ஒரு ரூபாய்க்கும், இசையருவி 4 ரூபாய்க்கும், கலைஞர் முரசு 12 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இந்த ஐந்து சேனல்களையும் உள்ளடக்கிய பேக்கேஜிங் விலை 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலுள்ள விவரங்களை பார்க்கும் பொழுது சித்திரம் சேனல் இனியும் இலவச சேனலாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேனல்களில் அறிவிப்புகலைஞர் குரூப்பின் மற்ற சேனல்களிலும் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகி அது தொடர்ந்து வருவதை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இது நாள் வரை இலவச சேனல்களாக அனைவரும் உபயோகித்த கலைஞர் குரூப் சேனல்கள் இனிமேல் உபயோகிக்க வேண்டும் என்றால் தனி தனி சேனல்களுக்கு குறைந்தது ஒரு ரூபாய் முதல் 12 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும். அதே சமயம் பேக்கேஜாக பயன்படுத்தும் பொழுது 25 ரூபாய் குறைந்த தொகையாக செலுத்த நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


முக்கியமாக தற்போதைய நிலையில் இலவச சேனல்களாக மேற்கண்ட சேனல்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தெரிய வருகிறது. எனினும் இன்னும் சில நாட்களில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 1 செப்டம்பர் 2022 முதல் கட்டணச் சேனல்கள் ஆகவே இவற்றை நாம் பணம் செலுத்தி பார்க்க வேண்டிய நிலை உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.


Post a Comment

0 Comments