தேதி அறிவிப்பு! ராஜ் நெட்வொர்க் ன் புத்தம் புதிய ஓடிடி சேவை..!

ராஜ் டிஜிட்டல் - புதிய ஓடிடி ஆப்


ராஜ் நெட்வொர்க் தரப்பில் புதிதாக வரவிருக்கும் ஓடிடி தளமானது தான் ராஜ் டிஜிட்டல் என்ற புதிய ஓடிடி ஆப் சேவையாகும். தமிழில் பிரபலமான சேனல்களில் ஒன்றான ராஜ் நிறுவனம் தனது ஓடிடி ஆப்பை தற்போது குறிப்பிட்ட தேதிக்குள் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைப் பற்றிய ஒரு சில தகவல்கள் தற்போது நாம் விரிவாக பார்க்கலாம்.


ராஜ் நெட்வொர்க் தரப்பில் ராஜ் டிவி, ராஜ் மியூசிக், ராஜ் டிஜிட்டல், ராஜ் நியூஸ் போன்ற பல சேனல்களை இதுவரை தொலைக்காட்சியில் நாம் கண்டு களித்து உள்ளோம்.

தற்போது அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து புதிய ஓடிடி சேவை ஒன்று வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் ராஜ் டிவி டிஜிட்டல் ஆகும்.

இந்தப் புதிய ஓடிடி ஆப் சேவையின் மூலம் நாம் 11 லைவ் சேனல்களை பார்த்துக் கொள்ளலாம் என்றும், பல சீரியல் நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம் என்றும், அதுபோக முக்கியமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை நம்மால் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓடிடி ஆப்பின் ஆரம்ப விலையானது மாதம் ₹29 ரூபாய் என்ற தொகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் நாம் செலுத்தும் ₹29 ரூபாய் மூலம் மேல் கண்ட லைவ் சேனல்கள், சீரியல்கள் மற்றும் பல திரைப்படங்களை கண்டு மகிழலாம்.

மேலும் இந்த ஓடிடி சேவையானது வரும் 23ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 2022 அன்று அனைவரின் பயன்பாட்டிற்கும் வரும் என ராஜி நெட்வொர்க் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த ஓடிடி சேவையின் சில அம்சங்கள் மற்றும் விலை மற்றும் தேதி குறிப்பிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்த விவரங்களுக்கு நமது தமிழ் டிவி இன்ஃபோ வை பின் தொடருங்கள்! நமது மற்ற சமூக வலைத்தளங்களிலும் அப்டேட்டுகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள பின் தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்! நன்றி!

Post a Comment

0 Comments