விஜய் டக்கர்
தமிழில் தற்போது ஸ்டார் நெட்வொர்க் தரப்பில் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு புதிய சேனல் விஜய் டக்கர். ஏற்கனவே தமிழில் ஸ்டார் நெட்வொர்க் தரப்பில் தமிழில் விஜய் என்ற பெயரில் தொடங்குகின்ற விஜய் டிவி, விஜய் சூப்பர் மற்றும் விஜய் மியூசிக் போன்ற சேனல்கள் உள்ளது. தற்போது தமிழில் அடுத்து வரவிருக்கும் சேனலாக விஜய் டக்கர் சேனல் உள்ளது. இந்த சேனல் ஒரு காமெடி சேனல் ஆக வரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த சேனல் தற்போது தனது வர்த்தக முத்திரையை மட்டும் பதிவு செய்துள்ளது. அதைத் தவிர இந்த சேனல் வருவதற்கு சிறிது காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தமிழில் ஏற்கனவே மேற்கண்ட விஜய் சூப்பர், விஜய் மியூசிக் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் போன்ற சேனல்கள் எச்டி தரத்தில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜய் டக்கர் சேனல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது எதுவும் வரவில்லை என்பதால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்கள் கிடைக்கப் பெறும் போது அதனைப் பற்றி நம் தமிழ் டிவி இன்ஃபோ தளத்தில் பார்க்கலாம்.
எனினும் வரும் காலத்தில் ஸ்டார் நெட்வொர்க் தரப்பில் விஜய் டக்கர் என்னும் இந்தச் சேனலானது வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொடர்ந்து பாருங்கள்! பகிருங்கள்! தமிழ் டிவி இன்ஃபோ வை... நன்றி!
0 Comments