புதிய தொழில்நுட்பத்துடனான ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ் களை களமிறக்கும் கேபிள் நிறுவனங்கள்..!

கேபிள் டிவி நெட்வொர்க்குகளின் புதிய அத்தியாயம்

தமிழகத்தில் தற்போது அனைத்து கேபிள் நெட்வொர்க் களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் மேலும் அடுத்த கட்டமாக நகர்வதற்கும் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். அது தான் தற்போது அதிகமாக மக்களிடையே பிரபலம் அடைந்த ஆண்ட்ராய்டு பாக்ஸ்கள் ஆகும். 


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் பாக்ஸ்கள் பொதுவாக டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை உள்ளடக்கியுள்ளதாகும். அதாவது மொபைலில் நாம் அதிகமாக பயன்படுத்தி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோஸ் மற்றும் பல ஆப்களாகும்.

அதிலும் தனிச்சிறப்பு என்னவென்றால் கேபிள் நெட்வொர்க்குகளின் இந்த செட்டாப் பாக்ஸ்கள் தனித்துவமாக கேபிள்டிவி களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக உள்ளது. டிவி சேனல் களோடு சேர்ந்து ஓடிடி ஆப்களையும் இணைய வசதியோடு நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

ஸ்மார்ட் பாக்ஸஸ் 


ஏற்கனவே எஸ்சிவி கேபிள் நெட்வொர்க் தரப்பிலிருந்து எஸ்சிவி இன்பினிட்டி என்ற பெயரில் அவர்களது கேபிள் டிவி பயனர்கள் அனைவரும் எளிதாக உபயோகிக்கும் வகையில் 4K தரத்துடன் வருகிறது. தங்களுக்கு பிடித்த கேபிள் டிவி சேனல்கள் மற்றும் இணைய வசதியுடன் தங்களுக்கு தேவையான ஓடிடி ஆப் ஐயும் பயன்படுத்திக் கொள்ளலாம். 


அதன்பிறகு அடுத்ததாக நாம் பார்க்கக் கூடியது சமீபத்தில் வெளிவந்த ஜிடிபிஎல் டிஜிட்டல் கேபிள் நெட்வொர்க் ன் ஜிடிபிஎல் ஜீனி ஸ்மார்ட் பாக்ஸ் ஆகும். இது தற்போது 6 மாநிலங்களில் ஆன்லைனில் புக்கிங் செய்து கொள்ளும் வசதியை ஜிடிபிஎல் இணைய பக்கம் அமைத்து உள்ளது. முதலில் ₹2,999 ல் இருந்த இந்த பாக்ஸ் ன் விலையானது தற்போது ₹1,999 க்கு கிடைக்கிறது. அதுபோக இதன் தொடக்க விலை ₹459 லிருந்து ஆரம்பமாகிறது.


எஸ்சிவி இன்பினிட்டி மற்றும் ஜிடிபிஎல் ஜீனி போக மற்றொரு ஸ்மார்ட் செட்டாப் பாக்ஸ் ம் கேபிள் டிவி பயனர்களுக்காக பிரத்தியேகமாக கொண்டுவர இருக்கிறது விடியலின் 7 பிளஸ் ஸ்மார்ட் பாக்ஸ். மற்றதைக் காட்டிலும் நம் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட் பாக்ஸ் உள்ளது. அதிலும் 7 பிளஸ் என்ற பெயருக்கு ஏற்றவாறு ஏழு வகையான பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட் செட் டாப் பாக்சில் உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோக வீட்டின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே கேபிளை பயன்படுத்தும் பதிலும் இதுவரை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் இது ஒரு அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை

கேபிள் நெட்வொர்க்குகளின் புதிய அத்தியாயமாக இந்த ஸ்மார்ட் ஸ்டாப் பாக்ஸ் செயல்படுகிறது. என்னதான் பலவகையான வழிகளில் நிறைய மாறுதல்கள் நம் அன்றாட வாழ்வில் நடைபெற்றாலும் உதாரணத்திற்கு அன்று ஒருவருக்கு கால் செய்ய மட்டுமே உபயோகிக்கப்பட்ட மொபைல் போன் ஆனது இன்று நம் அனைத்து விஷயங்களுக்கும் முதன்மையாக பயன்படுகிறது. 

புதிய மொபைல் போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை என்னதான் நாளுக்கு நாள் என்னதான் பலமடங்கு அதிகரித்தாலும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எப்போதும் குறைவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் தொலைக்காட்சியில் பலவகையான விஷயங்களில் மாறுதல்கள் நடைபெறுகின்றன உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் ஓடிடி ஆப் கள் முதன்மையாக வளர்ச்சி அடைந்து வருவது அனைவரும் அறிந்தவையே. எனவே கேபிள் நெட்வொர்க்குகளும் அதற்குத் தகுந்தாற்போல் ஒரு புது அத்தியாயத்தை உருவாக்கியுள்ளனர். அதுவே இப்போது அதிகமாகப் பேசப்பட்டு வரும் கேபிள் நெட்வொர்க்குகளின் ஹைபிரிட் ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸ்கள் ஆகும்.

"மாற்றம் ஒன்றே மாறாதது"என்ற வரிகளுக்கு ஏற்றாற்போல் கேபிள் நெட்வொர்க் அல்லாமல் மற்ற துறைகளிலும் அப்டேட்டடு ஆக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல பெரிய முன்னேற்றங்களுக்கு வித்திடுவது இதுபோன்ற சில சிறிய புதிய முயற்சிகளே ஆகும்.

Post a Comment

0 Comments