டிராய் சேனல் செலக்டர் ஆப்பின் பயன்பாடுகள் குறித்த விளக்கம்! தமிழில்

டிராய் சேனல் செலக்டர் ஆப்


இந்த பதிவில் நாம் பார்க்க விருப்பது டிராய் (TRAI- Telecom Regulatory authority of India) ன் ஒரு ஆப்பை பற்றிதான். இந்த ஆப் ஆனது  சில முக்கிய டிடிஎச் மற்றும் கேபிள்களில் நமது அக்கவுண்ட் பேலன்ஸ் பற்றிய விவரங்களையும் மேலும் நமது மாதாந்திர பேக்குகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. இதிலுள்ள ஆப்ஷன்களில் மற்றும் இந்த ஆப்பை எவ்வாறு உபயோகிப்பது போன்ற விவரங்களை தற்போது நாம் விரிவாக பார்க்கலாம்.


முதலாவதாக இந்த ஆப்பை டவுன்லோட் செய்துகொள்ள இந்த CLICK HERE ஆப்ஷனை கிளிக் செய்தோ அல்லது ப்ளே ஸ்டோரிஸ் சென்று டிராய் சேனல் செலக்டர் ஆப் என்று டைப் செய்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



இந்த ஆப்பை ஓபன் செய்தவுடன் முதலாவதாக நாம் எந்த டிடிஎச் அல்லது கேபிளை பயன்படுத்துகிறோமோ அது அந்த வரிசையில் உள்ளதா என்றும் இருப்பின் அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


அதன் பிறகு அடுத்த பகுதியில் நாம் நமது அல்லது டிடிஎச் ன்,


(1) ரிஜிஸ்டர் மொபைல் நம்பர்

(அல்லது)

(2) சந்தாதாரர் ஐடி

(அல்லது)

(3) செட்டாப் பாக்ஸ்/ விசி நம்பர் 


மேற்கண்ட மூன்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து அதன் பிறகு உங்கள் அக்கவுண்டில் பாஸ்வேர்டு அல்லது ஒடிபி பிற விவரங்கள் மூலம் வெரிஃபை செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் விவரங்களுக்கான முகப்பு பகுதியின் உள்ளே நுழையலாம்.



நீங்கள் லாகின் செய்து முடித்தவுடன் அந்த ஆப்பின் சம்மரி பக்கத்திற்கு செல்வீர்கள். அதில் உங்கள்,

* டிடிஹெச் அல்லது கேபிளின் பெயர் 

* எத்தனை பேக்கேஜ் களை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள் 

* எத்தனை சேனல்கள் மொத்தமாக அந்த பேக்குகளில் உள்ளன

* பேக்கேஜ் களில் உள்ளடங்காத தனியாக சப்ஸ்கிரைப் செய்துள்ள சேனல்களின் எண்ணிக்கை

* நீங்கள் உங்கள் டிடிஎச் அல்லது கேபிளை ஆக்டிவட் செய்த நாள்

* மாதச் சந்தா தொகை

* தற்போது இருப்பு எவ்வளவு 


போன்ற விவரங்கள் அனைத்தும் இந்த சம்மரி பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.



அந்த ஆப்பில் மேலும் மெனு ஆப்ஷனை க்ளிக் செய்து பார்க்கும் பொழுது அதிலும் மேற்பகுதியில் நம் அக்கவுண்ட் ன் சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோக, சம்மரி நாம் ஏற்கனவே பார்த்தது போல் முதலாவதாக உள்ளது. 


அதன்பிறகு உங்கள் சப்ஸ்கிரிப்ஸனை மாற்றியமைப்பதற்கான எடிட் சப்ஸ்கிரிப்ஸன் என்ற ஆப்ஷனும் அதனையடுத்து சேன்ஜ் செய்யப்பட்ட சப்ஸ்கிரிப்ஸனை பார்க்கும் ஆப்ஷன் ம் இறுதியாக நமது அக்கவுண்ட் ஐ லாகவுட் செய்து கொள்வதான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆப்பில் உள்ள பிரச்சினை அதிகப்படியான லோடிங் மற்றும் சில இடங்களில் பக் இஸ்யூ ஆகிய தொழில்நுட்ப கோளாறுகளும் உள்ளது இந்த ஆப்பை உபயோகிக்கும் போது அனைத்து பயனர்களும் சந்திக்க நேரிடும் முக்கியமான பிரச்சினை ஆகும்.


Post a Comment

0 Comments