ஐபிஎல் ஆஃபராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலை இலவசமாக அளிக்கும் முன்னனி டிடிஎச் நிறுவனங்கள்!

 டிடிஎச் VS ஐபிஎல்


ஐபிஎல் வந்த நாள் முதலே இந்தியாவில் பிரபலமாக உள்ள அனைத்து டிடிஹச் தரப்பிலும் பல ஆஃபர்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் ஏர்டெல் டிஜிட்டல் டிவி அவர்களது டிடிஎச் கஸ்டமர் களுக்கு ஆயிரம் அல்லது அதற்கும் மேலாக உங்கள் டிடிஎச் அக்கவுண்டிற்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் எந்தவித கூடுதல் தொகையை செலுத்தாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரு வருடத்திற்கான சூப்பர் பிளான் சப்ஸ்கிரிப்ஷன் ஐ பெறலாம்.



டிடிஎச் ஐபிஎல் ஆஃப்ர்


தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி டிடிஎச் களான டாடா பிளே, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி மற்றும் டி2எச் ஆகியவை தங்கள் டிடிஎச் ல் புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் ஐ நேரடியாக ஒளிபரப்ப கூடிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒன்றான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஐ இலவசமாக (தற்காலிகமாக) பெரும் வகையில் டிடிஎச் கள் இந்த ஆஃபர்களை வழங்கியுள்ளன. 


குறிப்பு :- புதிய வாடிக்கையாளராக நீங்கள் ஒரு டிடிஎச் இல் இணையும் போது இந்த ஆஃபரை நீங்கள் உங்கள் பேக்கேஜில் தனியாக இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஏனெனில், இந்தியா முழுவதும் இந்த ஆஃபர் தற்போது (மார்ச்-ஏப்ரல் 2022) நடைமுறையில் உள்ளது.


(இந்த ஆஃபரை பெற மேற்கண்ட டிடிஎச் களுள் ஏதேனும் ஒன்றை நீங்கள் புதிதாக வாங்கினால் போதுமானது)


இதில் குறிப்பிடத்தக்க சிறந்த விஷயம் என்னவென்றால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் புது வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்தாற்போல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்களை வழங்குகின்றனர். அதாவது உதாரணத்திற்கு இப்போது தமிழ்நாட்டில் இந்த ஆஃபர்கள் எப்படி செயல்படும் என்றால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலானது வழங்கப்படுகிறது. மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் எச்டி சேனல் இல்லாத காரணத்தினால் அதற்கு பதிலாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி சேனல் வழங்கப்படும். இதேபோன்று வடமாநிலங்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி எச்டி புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு (தற்காலிகமாக) இலவசமாக வழங்கப்படுகிறது.


ஏற்கனவே, டி2எச் ல் முதலாவதாக இந்த ஆஃபரை வெளியிட்ட பின்னர் மற்ற டாடா பிளே, டிஷ் டிவி போன்ற டிடிஎச் களும் அடுத்தடுத்து இந்த ஆஃபரை வெளியிட்டனர். இறுதியாக இன்று (27 மார்ச் 2022) ஏர்டெல் டிடிஎச் தரப்பிலும் இந்த ஆபரணத்தை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.



தெரிந்து கொள்ள வேண்டியவை:- 


டிடிஎச் நிறுவனங்கள் இந்த ஆஃபர்களை புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஐபிஎல் நேரங்களில் அதிகப்படியான மக்கள் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விரும்புவார்கள். 


அதேசமயம் புதிதாக ஏதேனும் ஒரு டிடிஎச் வாங்கலாம் என்ற எண்ணமும் பலருக்கும் தோன்றும். இவ்வாறு எண்ணுபவர்கள் கண்டிப்பாக ஸ்போர்ட்ஸ் ஆனாலும் அவர்களில் வர வேண்டும் மேலும் ஒரு புதிய டிடிஎச் கட்டுப்படியாகும் விலையில் இருக்குமா என்ற விஷயங்களை பார்ப்பதுண்டு. 


எனவே, இதுபோன்ற பெரும் வருவாய் ஈட்டும் நேரங்களை டிடிஎச் நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.


Post a Comment

0 Comments