தமிழ் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தமிழ் ஆடியோ பீட் ஸ்போர்ட்ஸ் 18 1 எஸ்டி மற்றும் எச்டி சேனல்களில்!

ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் ஆடியோ பீட்


வணக்கம் நண்பர்களே! நான் உங்கள் ராஜா. சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! இனி தொடர்ந்து வலைதள பதிவுகளை நமது தமிழ் டிவி இன்ஃபோ இணையத்தில் காணலாம். தற்போது இன்றைக்கான டிவி சேனல்கள் சம்பந்தப்பட்ட அப்டேட் என்னவென்று பார்த்தோமானால்,


Sports 18 -1 (SD & HD Logos)


வியாகாம் 18 நெட்வொர்க் ன் ஸ்போர்ட்ஸ் பிரிவின் கீழ் உள்ள ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் ஆனது தற்போது ஸ்போர்ட்ஸ் 18 1 (எஸ்டி & எச்டி), ஸ்போர்ட்ஸ் 18 2, ஸ்போர்ட்ஸ் 18 3 & ஸ்போர்ட்ஸ் கேல் ஆகி சேனல்களை லான்ச் செய்துள்ளது. இதைத் தவிர ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் சேனலும் அடுத்து வரவிருக்கும் தமிழ் சேனல்களில் ஒன்றாக இருப்பதும் அனைவரும் அறிந்ததே. 


ஆனால் தற்போது தமிழ் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் வருவதற்கு முன்னரே ஸ்போர்ட்ஸ் 18 தரப்பில் அவர்களின் இரண்டு சேனல்களான ஸ்போர்ட்ஸ் 18 1 எஸ்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 எச்டி சேனல்களில் தமிழ் ஆடியோ பீட் தற்போது ஆட் செய்துள்ளனர்.


இது தற்போதைய சூழ்நிலையில் பல நேரங்களில் நன்றாக செயல்படுவதில்லை எனினும் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (2023 உலக கோப்பைக்கு பிறகு நடைபெற்ற) முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஒர்க் செய்தது அனைவரிடமும் மிகிழ்ச்சியையும் ஸ்போர்ட்ஸ் 18 பார்க்க வைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Image credit: Aniruda Srikkanth


தமிழ் கமெண்டரியை பொறுத்த வரை கொஞ்சம் இரைச்சல் மற்றும் குறைந்த ஒலி இருந்தது. சிறப்பாக ஒலி அமைப்புகள் இருந்தது என்று கூற முடியவில்லை எனினும் தற்போதுதான் இந்த மாற்றம் நடந்துள்ளது என்பதால் போக போக நன்றாகும் என அனைவராலும் நம்பப்படுகிறது. (உங்கள் கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகிறது)


தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா போன்ற இன்னும் சில மொழிகளும் ஆடியோ பீட் ல் இருப்பதை நீங்கள் கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்!


Sundirect Audio Feed Check

மேலும், இதுபோன்று பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் டிவி இன்ஃபோ உடன்..!


Post a Comment

0 Comments